Friday 25 January 2013

விஸ்வரூபம் விமர்சனம்

வெளிநாட்டில் வாழும் டிவிட்ட்ர் நண்பரின் மூலம் பெறப்பட்ட விமர்சனம்,நன்றி புலவர் தருமி


    

Tuesday 15 January 2013

சமர்-விமர்சனம்

   ஹீரோவுக்கு தன் காதலை மெயிண்டைன் பண்ன தெரில அதுனால முதல் சீன்லயே விசாலுக்கும் ,சுனைனாவிற்க்குமான காதல் பிரேக் அப் பண்ணிட்டு சுனைனா பாங்காக் போயிடுரா.அந்த சோகத்திலேயே விசால் மூழ்கிகிடக்கும்போது 3 மாதத்தில் ஒரு கொரியர் வருது.
   
     அதுல பாங்காக் ல இருந்து சுனைனா அங்க வருனும்னு எழுது ஒரு டிக்கெடும் அனுப்புறாங்க.ஹீரோ பாங்காக் பயணிக்கும் போது திரிசாவை பார்க்கிறார்,பழகுறார்.

    சுனைனா வர சொல்ற இடத்துக்கு போறார்,அங்க எதிர்பாறா விதமாஏக பட்ட சம்பவம் நடக்குது,மிக பெரிய பிரச்சனையில விசால் மாட்டிகிறார்.ஒரு குரூப் வருது அதுல நீங்க மிக பெரிய மில்ல்லினியர்னு சொல்ராங்க,கொலை முயற்சி பண்றாங்க.,
 
   இப்படி பல்வேறு திருப்பத்தோட போற படத்துல என்ன நடக்குது,அந்த சூழ்ச்சிக்கு காரணம் யாருனு கண்டுபுடிக்கிறார் விசால்.கடைசில திரிசாவோட சேந்தாரா,அந்த சூழ்ச்சிக்கு என்ன,ஏன் அவர சுத்தி நடக்குது,அவங்களை அவர் என்ன பண்றாருனு வெள்ளிதிரையில் பார்க்க.

  இடைவேளைக்கு அப்றமா படத்துல சூடு புடிக்குது.ஒவ்வொரு காட்சியும் முக்கியதுவம் வாய்ந்தது.வில்லன் கம் சைக்கோவா வர இரண்டுபேரும் நல்ல தேர்வு.

  இது போன்றகதை அம்சம் உள்ள படங்களை வரவேற்கனும்,இதே போன்ற கதை உள்ள படம் தான் டேபிள் நம் 21 என்ற ஹிந்தி படம்.

படத்துக்கு மிக பெரிய பலம் யுவன் பாடல்களும்,தரணின் பின்னனி இசை,ரிச்சர்ட் நாதன் கேமரா,திரைக்கதை.,விசால்,திரிசா.

   எடிட்டிங் இன்னும் கொஞ்சம் நல்ல இருந்த தேவையற்ற குலப்பத்த தவிர்த்து இருக்கலாம்.ஒரு உண்மைய சொல்லனும்னா படம் பார்க்க போனவர்களில் ஏதோ எனக்கு மட்டும் தான் இந்த படம் பிடிச்சிருக்கு,மற்றவர்களுக்கு பிடிக்கலனு சொல்லிடாங்க.


 எதிர்பார்க்க படும் மதிப்பெண்:
ஆனந்தவிகடன் - 44
குமுதம்-ஓக்கே
மை ரேட்டிங் - 7.5/10

Thursday 20 December 2012

தமிழ் சினிமா 2012


1.வழக்கு எண் 18/9
2. நண்பன் 
3. பீட்ஸா 
4. தடையற தாக்க
5. நான் 
6. துப்பாக்கி 
7. நீர் பறவை
8. நான் ஈ
9. கும்கி
10. கலகலப்பு 

Best Film 
வழக்கு எண் 18/9

Best Director 
S.S.ராஜ்மவுலி ( நான் ஈ )

Best Actor 
விஜய் சேதுபதி ( பீட்சா, ந.கொ.ப.கா )

Best Actress 
லட்சுமி மேனன் ( கும்கி / சுந்தரபாண்டியன் )

Best Supporting Actor 
முத்துராமன் ( இன்ஸ்பெக்டர் குமாரவேலாக வழக்கு என் 18/9ல் )

Best Supporting Actress 
சரண்யா பொன்வண்ணன் ( ஓகே ஓகே, நீர் பறவை )

Best Performance in a Negative Role 
சுதீப் ( நான் ஈ )

Best Comedian 
சந்தானம் ( கலகலப்பு, ஓகே ஓகே etc )

Best Male Debut 
தினேஷ் ( அட்டைக்கத்தி )

Best Female Debut 
ஊர்மிளா மகன்தா ( வழக்கு என் 18/9)

Best Emerging Director Male Debut 
கார்த்திக் சுப்புராஜ் ( பீட்சா )

Best Emerging Director Female Debut 
சினேகா பிரிட்டோ ( சட்டம் ஒரு இருட்டறை )

Best Music Director 
சந்தோஷ் நாராயணன் ( அட்டகத்தி / பீட்சா )

Best Lyricist 
யுகபாரதி ( கும்கி - முழு ஆல்பம் )

Best Story 
கார்த்திக் சுப்பாராஜ் ( பீட்ஸா )

Best Screenplay 
ஏஆர் முருகதாஸ் ( துப்பாக்கி )

Best Dialogue 
முருகன் ( பில்லா2 )

Best Action 
அனல் அரசு ( தடையற தாக்க )

Best Art Direction 
விஜய் முருகன் ( அரவான் )

Best Cinematography 
சுகுமார் ( தடையற தாக்க / கும்கி ) 

Best Editing 
லியோ ஜான் பால் ( பீட்சா )

Best Choreography 
ஷோபி ( மக்கயாலா மக்கயாலா )

Best Costume Design 
கோமல் சஹானி ( துப்பாக்கி )

ஏதோ நம்மால முடிஞ்ச சமூக சேவை ;))

Friday 14 December 2012

நீ தானே என் பொன்வசந்தம்

      ஹீரோ,ஹீரோயின் இருவரும் கிளாஸ்மெட்,காலேஜ்மெட்,3 படத்துலமாதிரியே ஆரம்பத்துல இருந்தே லவ் பண்ராங்க,ஆனா வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்கமாட்ராங்க,அடிக்கடி எதாவது பேசி ஈகோ கெலம்பி சண்டை ஆகிறுது.

    மு.க் அழகிரி,ஸ்டாலின் மாதிரி சண்டை போட்டுகுற அவங்க எப்டி பிரசன்னா,சினேகா மாதிரி சேருராங்கனு சொல்ர படம் தான் இந்த நீ தானே என் பொன்வசந்தம்.

      ஆன சும்ம சொல்லகூடாது சமந்தாவும்,ஜீவாவும் நெஜமவே லவ்வர் மாதிரி செமயா நடிச்சிருக்கங்க(எவங்கண்டது நெஜமா கூட இருக்கலாம்#போட்டுவிடு)

     படத்தோட முதல் ஹீரோ இளையராஜா தான்.என்னம்மா இருக்குது சாங்லாம்,அருமையான இசை,பாடல் படமாக்கியதில் சாய்ந்து சாய்ந்து பாடலை வேரு விதமாய்  காட்டி இருக்கலாம்னு தோனுது.ஆன எப்பவும் BGM ல வெளுத்து வாங்கும் ராஜா இதுல அடக்கி வாசிச்சிருக்காருனே சொல்லலாம்,சில இடத்துல மயான அமைதி.

   ஜீவா படம் ஃபுல்லா மீசையே இல்லாம ரொம்ப யங்கா வராரு,எம்ம சமந்தா முகத்துக்கு பவுடர் போடுரியா இல்ல வெண்ணைய தடவுரியா சும்மா வழவழனு இருக்கு.

   சந்தானம் படம் முழுக்க வரலனாலும் பாதி படம் வரார்.அவ்ருக்குனு குண்டா ஒருஜோடி,அவங்க டிராக் தான் ஜிவா சமந்த டிராக் போரடிக்கும்போது காமெடி பண்ணுது.

   ரிசப்சனில் அண்ணியின் தங்கையை மனைவியாக் ஏற்றுகொள்ள ஜீவா சம்மதிப்பதும்,அதற்கு சமந்தா சோகத்துடன் கைகுலுக்கி வாழ்த்து சொல்லவரும்போது அதை ஜீவா மறுப்பதும்,அப்போது சமந்தா அடிபட்ட பார்வையுடன் ஜீவாவை பார்ப்பது மிகவும் நுணுக்கமான இயக்கத்திற்கு ஒரு சான்று,சமந்தா மொட்ட மாடியில் வெடித்து கதறும் காட்சி,கிளைமாக்ஷ் ஹேட்ஸாஃப் கவுதம் வாசுதேவ் மேனன்.

எதிர்பார்க்கபடும் ரேட்டிங்க்

ஆனந்தவிகடன் - 44
குமுதம்                  -ஓகே

காதலர்கள்,இளைஞர்கள்,பிரிந்துவாழும் தம்பதிகள் பார்க்கலாம்,இளையராஜா விரும்பிகள் கட்டாயம் பார்க்கவேண்டிய படம்.
     

Sunday 2 December 2012

Life Of Pi-விமர்சனம்

   ஹீரோவோட குடும்பம் பாண்டிசேரில இருக்கு.அவங்க அப்பா Zoo மாதிரி மிருகங்களை வச்சி கண்காட்சி வச்சி நடத்துராரு.அந்த இடம் அரசாங்கத்துக்கு சொந்தமானது.எனவே அதை காலி பன்ன சொல்றாங்க.அதனால அவங்க கனடாவுக்கு கெலம்புராங்க.எல்லா விலங்குகளுடன் கப்பல்ல போறாங்க.

    கப்பல்ல போகும்போது புயல் காரணமா கப்பல் விபத்துக்குள்ளாகுது.அதுல ஹீரோவோட பெற்றோர்களும்,சில விலங்குகளும் பலி ஆகிடுது.மீதி தப்பி பிழைப்பது,உராங்குட்டான்,புலி,எலி,ஹீரோ மட்டுமே.எல்லாம் படகுல போறாங்க.அதுல நடக்குற சாகச பயணம் தான் இந்த Life of pi.

     படத்தை எடுக்கும் போதே ஆஸ்கர் அள்ளிடனும்னு முடிவு பண்ணி தான் பட,ம் எடுத்துருப்பார் போல அவார்ட் வாஙுவது உறுதி.செமையான துணிச்சலான கதை,மசால படங்களை பார்த்த கண்களுக்கு ஒரு விஸுவல் ட்ரீட் இந்த படம்.ஒளிப்பதிவு அள்ளுது.அவ்ளோ நேர்த்தி.

   ஹீரோ சுராஜ் வர்மா,அப்டியே கேரக்டராவே மாறிட்டார்.கேரக்டெருக்காக இருவிதமான உடல் அமைப்பை மாற்றி இருக்கிறார்.ஹீரோயின் ஸ்வரந்தி,அம்மாவாக தபு தன் பங்கினை சரிவர செய்துள்ளனர்.

இயக்குனர் ஆங் லீ.ஹல்க் படத்தின் இயக்குனர்.இசை அருமை தான் என்றாலும் ARR இசை அமைத்திருந்தால் இன்னும் அருமையாக் இருந்திருக்கும்.ஒளிப்பதிவு,3டி எஃப்ஃபெக்ட்,கிராஃபிக்ஸ் இந்த 3பிரிவில் ஏதேனும் ஒரு பிரிவில் ஆஸ்கார் நிச்சயம்.

  அழகிய ரசனை உள்ளவர்கள்,ஒளிபதிவுக்காக படத்தை பார்ப்பவர்கள் ,மாறுபட்ட சிந்தனை உள்ளவர்கள் கண்டிப்பாக் பார்த்து ரசிக்கும் படியான திரைப்படம்.

   நான் சாதாரண தியேட்டர்ல தான் பாத்தேன்.3டி வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள் அற்புதமான அனுபவம் கிடைக்கும்.

Friday 30 November 2012

நீர்பறவை-விமர்சனம்

               ஹீரோ ஒரு சரக்கு பார்ட்டி,எப்ப பாத்தாலும் குடி குடினு ஊர சுத்துர ஆளு,குடிக்காக யார்கிட்டயும் கையேந்தகூட தயங்காதவர்.அம்மா அப்பா ஒரு மீனவ குடும்பத்தை சேர்ந்தவர்கள்,ஹீரோயின் சர்ச்ல ஒர்க் பண்றாங்க,ஹீரோயினை பார்த்ததும் ஹீரோ லவ்விங்.குடிக்கு அடிமை இப்ப காதலுக்கும் ஆகிறார்.

                  ஹீரொவை குடி ஹாஸ்பிடல்ல சேத்து குடில இருந்து மீட்குராங்க.இப்ப ஹீரோயின் ஹீரோவ கடல்ல போய் மீனவர்களோட சேர்ந்து மீனவரா ஆகுங்கனு சொல்றா.ஆன ஹீரோவ மீனவர்கள் கடக்கு போக அனுமதிக்கல,ஏன்னா ஹீரோ மீனவர் கிடையாது அவர் ஒரு அனாதை தத்துபிள்ளை,அவர் காத்லிக்காக மீனவர் ஆகுரார இல்லையா என்பதை சொல்லவரும் படம் தான் இந்த நீர்பறவை.

               ஹீரோவாக விஷ்ணு நடிக்க வாய்ப்புள்ள பாத்திரம்,ஆனா குடிகாரன் போன்ற நடிப்பு இவரு முகத்துக்கு செட் ஆகல,ஹீரோயின் சுனைனா செம நடிப்பு இயல்பா இருக்காங்க,இவரின் வயதான தோற்றதுக்கு நந்திதா தாஸ் செம தேர்வு,ஆனா இவங்களுக்கு நடிக்க வாய்ய்ப் கம்மி தான்.வழக்கமான அம்மா கேரக்டெர் சரண்யாவுக்கு பிரிச்சி மேயுது இந்த ஆண்டி,பையன் குடிக்க காசு கேக்கும் பொது இவரின் நடிப்பு அற்புதம்.சமுத்திரகனி வருவது கொஞ்சம் தான் என்றாலும் மனதில் நிற்கிறார்.

               கண்ணியமான காதல் கதை,நேர்த்தியான திரைக்கதைதான் இருந்தாலும் சொன்ன விதம் இன்னும் அழுத்தம்மாக கூறி இருக்கலாம்.மீனவர்கள் பற்றிய படம் என எதிர்பார்த்து செல்பவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.மிகபெரிய பலம்(வசனம்.பாடல்கள்,ஒளிப்பதிவு)


எதிர்பார்க்கபடும் ஆனந்தவிகடன் ரேட்டிங்-43
குமுத,-ஓக்கே

Tuesday 13 November 2012

துப்பாக்கி விமர்சனம்


              வருங்கால சி.எம், கனவுல இருக்க விஜயகாந்த் இதுவரை 37 படங்களில் நடித்து அடிச்சி துவைத்த கதை தான் என்றாலும் ARமுருகதாஸ் தன் திரைகதை யுத்தியால் வித்யாச படுத்துகிறார்.

             ஹீரோ ஒரு மிலிட்டரி ஆபிசர்,விடுமுரையை கழிக்க மும்பையில் உள்ள தன் வீட்டிற்க்கு வருகிறார்,அங்கே காதலும் பாமும் வெடிக்குது,காதலுக்கு காரணமான காஜலை சில பல மொக்கையான காட்சிகளின் பின்னனியில் கைபிடிப்பது ஒருபுறமும்,பாமுக்கு காரணமான ஸ்வீப்பர் ஸெல்லை சேர்ந்த ஒருவனை பிடிக்கிறார் ஹீரோ,அவனை வைத்து ஒட்டுமொத்த தீவிர வாத கும்பலையும் பிடித்து தேசத்தை காப்பாற்றுகிறார் ஹீரோ.

            வழக்கமான தமிழ் சினிமா பானையை விட்டு விழகாத கதை தான் என்றாலும் திரைகதையில் அற்புதமாக விளையாடி இருக்கிறார் இயக்குனர்.

           வில்லன் படத்துக்கு பொறுத்தமானவர்,பில்லா2 வில் எதிர்பாத்ததை இதில் பூர்த்தி செய்துள்ளார்.காஜல் வரும் இடங்களில் சிரிப்பு வெடி இந்த படத்தில் விஜய்க்கு பதில் இவரே காமெடி பண்ணி ஸ்கோர் பன்றாங்க,சத்யன் சில சமயம் கலகல்ப்பு ஊட்டினாலும்,ஜெயராம் வரும் காட்சியில் தூக்கம் தான் வருது.

           சந்தோஷ் சிவன் கேமெரா ஆங்கிள் அஹ் பத்தி நான் சொல்ரதுக்கு ஒன்னுமில்ல,மனுசன் பூந்து விளையாடுராரு..

விஜய்,நடிப்பு,துடிப்பு,கோபம்,சந்தோசம் எல்லாம் காட்டுராறு ,ஆன இவரு பண்ர சில பல ஸ்டைல்ஸ் தல பண்ரது போல இருக்கு..

படத்தில் ஹைலைட்டான காட்சிகள் 3;

1.12 ஸீவீப்ப்ர் ஸெல் தீவிரவாதிகளை ஒரே நேரத்தில் கொல்லும் அந்த காட்சி
2.தங்கச்சிய பணயம் வச்சி அந்த கும்பல பிடிகிறது
3.கிளைமாக்ஸ் சண்டை

பிளஸ்:
திரைக்கதை
விஜய் பஞ்ச் டயலாக் இல்லாம அமைதியான நடிப்பு
ஒளிப்பதிவு

மைனஸ்:
ஏகப்பட்ட லாஜிக் மீரல்கள்
( எ.கா.படத்துல முக்கியம்மான காட்சி 12 ஸீலீப்பர் ஸெல் அஹ இருக்கவன் போலிஸ்ட இருந்து தப்பிச்சிடுரான்..அப்ரம் அவன் ஃபாலோ பண்ணி புடிக்கிற சீன்ல,ஒரு தேட பட்டு வரும் தீவிரவாதி தெருவுல ஹாய நடந்து போரான்,ஏன் மும்பைல போலிஸ் இல்லய...இப்டி தான் அஜ்மல் கசாப் போனாலும் விட்ருவாங்களா...)

தேவை இல்லாம் தினிக்க பட்ட பாடல்கள்(விஜய் கேட்டு வாங்கிருப்பாரு போல)

கிளைமாக்ஸ்ல ஒரு டிவிஸ்ட்டு இருக்கு இருக்கு நு சொல்லி எங்களுக்கு டிவிஸ்ட்டு கொடுத்தது..

எதிர்பார்க்கபடுபவை:

ஆனந்த விகடன் - 44
குமுதம்-ஓக்கே


போக்கிரிக்கு கீழே,நண்பன்,வேலாயுத்திற்க்கு மேல..படம் குடும்பத்துடன் பாக்கலாம்.